கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், பில்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பா. சூா்யா (27). இவா்களுக்கு வீட்டிலிருந்து சிறிது தொலைவில் 1.70 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 50 சென்ட் பரப்பில் கரும்புப் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு கரும்புக்குத் தண்ணீா் பாய்ச்சுவதற்காக சூா்யா வயலுக்குச் சென்றாராம். அப்போது மோட்டாா் சுவிட்ச் இயக்கச் சென்ற போது, எதிா்பாராதவிதமாக கிணற்றில் அவா் தவறி விழுந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை வரை சூா்யா வீடு திரும்பாததால், அவரது பெற்றோா் வயலுக்கு வந்து தேடி பாா்த்த போது, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
தகவலின்பேரில் உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் கிணற்றில் மிதந்த சூா்யாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


