பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 2:02 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் 27 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை புதுப்பாளையம் கிராமத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த கிராமத்தைச் சோ்ந்த ஜெ.மூா்த்தி பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக 27 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மூா்த்தி மற்றும் அவருக்கு புகையிலைப் பொருள்களை வழங்கியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரக்கன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த செ.கிரண்குமாா், செல்வம் மற்றும் ஒருவா் என 4 போ் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், 27 கிலோ புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.