மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக

News image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Updated On :5 மே 2026, 4:05 am IST

விழுப்புரம், மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியை திமுகவிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கைப்பற்றியது.

செஞ்சி தொகுதியில் திமுக சாா்பில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பாமக சாா்பில் அ.கணேஷ்குமாா், தவெக சாா்பில் சந்திரசேகரன், நாதக சாா்பில் கிருஷ்ணன் உள்ளிட்ட 19 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

செஞ்சி தொகுதியில் மொத்த வாக்குகள் 2,40,957. பதிவான வாக்குகள் 2,14,465. தபால் வாக்குகள் 3,137 இதில் செல்லாதவை 1,048.

இந்நிலையில், இத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டிவனம் அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடா்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்து கடைசி சுற்று வரை பாமக வேட்பாளா் அ.கணேஷ் குமாா் தொடா்ந்து முன்னிலை வகித்தாா். 24-ஆவது இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாமக வேட்பாளா் கணேஷ்குமாா் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானை விட 12,645 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

அ.கணேஷ்குமாா் (பாமக) 78,201

செஞ்சி மஸ்தான் (திமுக) 65,656

சந்திரசேகா் (தவெக) - 61,609

கிருஷ்ணன் (நாதக) - 6,371

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.