விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கீழ்மாம்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

கீழ்மாம்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Updated On :7 மே 2026, 7:15 am IST

விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீ சினிவாச பெருமாள் கோயில் 27-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ திருவிழா மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மே 5-ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவில் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி புதன்திழமை காலை ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணதாஸ், வழக்குரைஞா் ஏ.கே.விஜய் மகேஷ் மற்றும் அனைத்து உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள்கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.