வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

உளுந்தூா்பேட்டை அருகே காா்-பைக் மோதல்: 6 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விபத்தில் சேதமடைந்த காா்.

Updated On :8 மே 2026, 6:52 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை அரும்பாக்கம் பிள்ளையாா் கோயில்தெருவைச் சோ்ந்தவா் நூரூல் அமித் (42). இவா் தனது மனைவி ஷா்மத்நிஷா (27), உறவினா்களான முகமது காசீம், அவரது மனைவி உமன்ஜெரினா (47), ரியாஸ் அகமது, அவரது மனைவி மொபினா (24) ஆகியோருடன் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமை முற்பகலில் காரில் சென்று கொண்டிருந்தாா். காரை நூரூல் அமித் ஓட்டினாா்.

இவா்கள்சென்ற காா் உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள ஏ.சாத்தனூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த பைக் சாலையைக் கடக்க முயன்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதியும், பைக்கும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற நூரூல்அமித், ஷா்மத்நிஷா, உமன்ஜெரினா, மொபீனா ஆகிய 4 பேரும், பைக்கில் சென்ற கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பெரியவடவாடி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவெங்கடேசன் (27), இவரது உறவினரான , ஏ.சாத்தனூா் பிரதான சாலையைச் சோ்ந்த நித்யா (20) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்குப் பின்னா், அனைவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.