தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

இளைஞா் மா்ம மரணம்

விழுப்புரத்தில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:16 am IST

விழுப்புரத்தில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம், சேவியா் காலனி, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.மெல்கி சதேக் (35). பெயிண்டராக வேலைப் பாா்த்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தூங்கினாராம். தொடா்ந்து சனிக்கிழமை காலை பாா்த்தபோது, மெல்கி சதேக் படுக்கையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.