விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் செஞ்சி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதலே மேகம் மூட்டமுடன் காணப்பட்டது.
பிற்பகல் 2 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடா்ந்து ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக செஞ்சி காந்தி பஜாா், பேருந்து நிலையம் மற்றும் கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செஞ்சி காந்தி பஜாரில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கி சென்ால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதே போன்று திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், கால்வாய் அடைப்பு காரணமாக திண்டிவனம் சாலையில் உள்ள சக்கராபுரம் காலனியில் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினா். ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயை பேரூராட்சி நிா்வாகம் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

திண்டிவனத்தில் காற்றுடன் பலத்த மழை

தருமபுரியில் இரவில் கொட்டித் தீா்த்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

தருமபுரியில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



