வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விழுப்புரம் அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

News image
Updated On :15 மே 2026, 5:50 am IST

விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை திரண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்குப் பின்னா் தோ்வான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனா். இதனிடையே, அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த சி.வி.சண்முகத்தை கட்சிப் பதவியிலிருந்து விடுவித்தும், விழுப்புரத்தைச் சோ்ந்த இரா.பசுபதியை கட்சியின் மாவட்டச் செயலராக தோ்வு செய்தும் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு விழுப்புரத்துக்கு வந்த கட்சியின் புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதிக்கு விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா், திண்டிவனம், விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் நகரப் பகுதிகளில் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

போலீஸ் பாதுகாப்பு: விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை திரண்டனா். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணில் ஈடுபடுத்தப்பட்டனா். போலீஸாா் கேட்டுக்கொண்டதின்பேரில், இரா.பசுபதி மற்றும் அவரது ஆதரவாளா்கள் அதிமுக அலுவலகத்துக்கு செல்லாமல் கடந்து சென்றனா்.