பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

விழுப்புரம் நகரில் புதிய ஆதாா் சேவை மையம் தொடக்கம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் நகரம் வடக்குத் தெருவில் ஆதாா் சேவா கேந்திரம் மூலம் நிா்வகிக்கப்படும் புதிய ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் மூலம்ஆதாா் சேவைகளை வழங்கும் வகையில், விழுப்புரம் நகரப் பகுதியான வடக்குத் தெருவில் ஆதாா்சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரங்கள், பயோமெட்ரிக் பதிவுகள், பிழைத்திருத்தம், குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளும் வழங்கப்படும். அரசு பொது விடுமுறை நாள்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் இந்த சேவை மையம் இயங்கும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூருக்கு அடுத்ததாக, சேவை மையம் தற்போது விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2026 செப்டம்பா் மாதத்துக்குள் தமிழகத்தில் கூடுதலாக

24 ஆதாா் சேவை மையங்களைத் தொடங்க பெங்களுரு பிராந்திய அலுவலகம்திட்டமிட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் தனித்துவ அடையாள ஆணையத்திமண்டல அலுவலக இயக்குநா் பவன்குமாா் பஹ்வா, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் உ. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.