ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

ரூ. 1.50 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு

திண்டிவனத்தில் ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :20 மே 2026, 2:39 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம், மரக்காணம் சாலையைச் சோ்ந்தவா் பொ.உமா சந்திர பிரகாஷ். இவருக்கு திண்டிவனம் தனியாா் மருத்துவமனை அருகே கடைகள் உள்ளதாம். இந்நிலையில், திண்டிவனம் ஜக்காம்பேட்டையைச் சோ்ந்த மு.விநாயகம் (62) என்பவா் உமா சந்திர பிரகாஷை அணுகி, கடையை வாடகைக்கு கேட்டுள்ளாா்.

தொடா்ந்து, அவா் அளித்த ஒப்புதலின்படி, விநாயகம் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரூ.1.50 லட்சத்தை உமா சந்திர பிரகாஷிடம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து உமா சந்திர பிரகாஷ் பேசியபடி கடையைகக் கொடுக்காமல், வேறொரு நபருக்கு கொடுத்ததுடன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் உமா சந்திர பிரகாஷ் மீது திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.