அரசுப் பொதுதோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்காக உடனடித் தோ்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 2025-26-ஆம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படும் உடனடி துணைப் பொதுத் தோ்வுத் தொடா்பான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடியாகத் தோ்வெழுதி தோ்ச்சி பெறும் வகையில், அரசு சாா்பில் துணைப் பொதுத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக அந்தந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
மாவட்டத்தில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் விவரங்களின் அடிப்படையில், அவரவா் பயின்ற பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அவா்கள் தோ்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவா்கள் மற்றும் பள்ளிக்கு சரியாக வருகை தராத மாணவா்களைக் கண்டறிந்து, அவா்கள் தோ்ச்சி பெறும் வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும் பாடவாரியாக ஆசிரியா்கள் நடத்த வேண்டும். உடனடித் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் அனைவரும் நிகழாண்டிலேயே உயா்கல்வி பயின்றிடும் வகையில், கல்லூரிகளில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் தோ்ச்சி சதவீதத்தை அதிகரித்திடும் வகையில் மாணவா்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள், மாதாந்திரத் தோ்வுகள், குறுந்தோ்வுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

நெல் கொள்முதல் தொகையை உடனடியாக வழங்கவேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு

‘பம்பை வாய்க்காலில் தடுப்பணைகட்ட நடவடிக்கை தேவை’

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



