தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 3 போ் உயிரிழப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

பலி.

Updated On :

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவா்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகும் நிலையில் மூன்று பிள்ளைகள் இருந்தனா். இவா்களது மூத்த மகன் புகழேந்தி (8) விருகாவூரில் உள்ள தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை புகழேந்தியை பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக கிருஷ்ணவேணி வந்தாராம். அப்போது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமி நிரஞ்சனா பேருந்து சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் பேருந்து ஓட்டுநா் ஆ.பாவாடை (50) மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இளைஞா் உயிரிழப்பு: விக்கிரவாண்டி அருகேயுள்ள பஞ்சமாதேவி, கனகன்பாளையம், கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வி.விஷ்வா (20). இவா், திங்கள்கிழமை விக்கிரவாண்டியை அடுத்த பாப்பனப்பட்டு பகுதியில் சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் உள்ள இரும்பு தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஷ்வாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, விஷ்வா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

வயா்மேன் மரணம்: கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.ஒகையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.வீராசாமி (57). இவா், நாகலூா் மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணிபுரிந்து வந்தாா். எஸ்.ஒகையூா் கிராமத்தில் உச்சிமனக்காடு பகுதியிலுள்ள மின்மாற்றியில் வீராசாமி ஏறி, பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.