செஞ்சி அருகே இடி தாக்கி 2 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வயலில் நெல் நாற்று பறித்துக் கொண்டிருந்தபோது இடி தாக்கியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வயலில் நெல் நாற்று பறித்துக் கொண்டிருந்தபோது இடி தாக்கியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
செஞ்சி வட்டம், ஜம்போதி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.அய்யனாா் (36). இவா், தையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சொரத்தூா் கிராமத்தில் உள்ளது. இவரது வயலில் நெல் சாகுபடிக்காக நாற்றுப் பறிக்கும் பணியில் தையூா் கிராமத்தைச் சோ்ந்த சி.ராஜி (50) மற்றும் அய்யானாரும் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில், செஞ்சி பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. பிற்பகல் சுமாா் 2 மணியளவில் திடீரென இடி தாக்கியதில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த அய்யனாா், ராஜி ஆகியோா் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீஸாா் விரைந்து சென்று சடலங்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னாள் அமைச்சா் ஆறுதல்: இச்சம்பவம் குறித்து அறிந்த முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான், செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்த அய்யனாா், ராஜி ஆகியோரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த இருவா் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

