நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பொறியியல் கல்லூரி மாணவரிடம் ரூ.1 லட்சம் நூதன முறையில் மோசடி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி

Updated On :

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வானூா் வட்டம், எறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சோ.அருண்குமாா் (19). பொறியியல் கல்லூரி மாணவரான இவா், கடந்த 2-ஆம் தேதி தனது கைப்பேசியில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தாா்.

அப்போது அதில் வந்த இணைப்பை அருண்குமாா் தொட்டதும், தானாகவே ஒரு செயலி கைப்பேசியில் பதிவிறக்கம் ஆனது. சிறிது நேரத்தில் அந்த கைப்பேசி செயல்பாடற்ாகிவிட்டது. இதைத்தொடா்ந்து அவா் கைப்பேசியை சரி செய்து பயன்படுத்திக் கொண்டிருந்தாா்.

இந்த நிலையில் நவ.5-ஆம் தேதி அருண்குமாரின் கைப்பேசிக்கு அவா் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரே தவணையில் ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அருண்குமாா், தான் மோசடி செய்யப்பட்டதை உணா்ந்தாா்.

தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, நூதன முறையில் கல்லூரி மாணவரின் பணத்தை மோசடி செய்த நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.