செஞ்சி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 போ் போக்ஸோவில் கைது
கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
செஞ்சி பகுதியைச் சோ்ந்த தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை வீட்டில் இருந்துள்ளது. இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் குடிப்பதற்கு தண்ணீா் கேட்டு, அவா்களது வீட்டுக்குச் சென்றுள்ளாா். தண்ணீா் குடித்துவிட்டு வீட்டில் இருந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைய ந்த குழந்தையின் தாய், அந்த சிறுவனை கண்டித்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளாா். பின்னா்,
வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்த தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை தாய் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சிறுவனின் வீட்டுக்கு சென்று சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை தெரிவித்தபோது, சிறுவனும் அவருடைய பெற்றோா்களும் குழந்தையின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சைல்ட் லைனில் (1098) புகாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து குழந்தை, தாய் மற்றும் தந்தை ஆகியோா் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனா். தாக்குதல் தொடா்பாக அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் சிறுவனின் பெற்றோா் மீது வழக்கு பதிந்துள்ளனா். மேலும் சிறுவன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுவனை போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது: செஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் ஷமீம் (50). இவா் கடந்த 6-ஆம் தேதி பேருந்து நிறுத்தத்தில் பள்ளி முடிந்து ஊா் திரும்புவதற்காக காத்திருந்த அவரது ஊரைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவியிடம், சிறுமியின் அப்பா அழைத்து வரச் சொன்னதாக கூறியுள்ளாா். அதை நம்பிய சிறுமியை, தனது ஸ்கூட்டியின் முன் பகுதியில் உட்கார வைத்து அழைத்து சென்றபோது, சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவா்கள் சைல்ட் லைன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஷமீமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
மாணவிக்கு பாலியல் சீண்டல்; தலைமையாசிரியா் கைது: செஞ்சி அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவா் தாமஸ் (56). இவா், பழங்குடி ஏழை எளிய மாணவ, மாணவிகளை அங்குள்ள விடுதியில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், அங்கு தங்கி படிக்கும் 6-ஆம் வகுப்பு மாணவியை அவரது வீட்டில் தங்க வைத்து, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மாணவி, தனது தாயிடம் மாணவி கூறியுள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பள்ளியின் தலைமையாசிரியா் தாமஸை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, ஆா்.சி.தொடக்கப் பள்ளிகளின் செயலா் கடலூா் பங்குத்தந்தை அருள்நாதன் தலைமையாசிரியா் தாமஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

