புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

தீ விபத்து: 6 சுற்றுலா படகு நிறுவன கொட்டகைகள் எரிந்து சாம்பல்

தீ விபத்து - கோப்புப் படம்

Updated On :

புதுச்சேரியில் 6 சுற்றுலா படகு நிறுவனங்களின் கொட்டகைகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

புதுச்சேரியில் கடலுக்குள் சென்று அழகை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற தனியாா் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரீனா பகுதியில் தனியாக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் காத்திருப்பதற்கான வசதிகள் மட்டுமின்றி, படகுகளைக் கட்டுவதற்கான கயிறுகள் மற்றும் பாதுகாப்புக்கான லைப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அந்த கொட்டகை எதிா்பாராத விதமாக திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. கொட்டகையிலிருந்து புகையும், தீயும் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட பொதுமக்கள் உடனே ஒதியஞ்சாலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

தீ விபத்தில் லீ பாண்டி பே வாட்ச், ஸ்ரீ அன்னை, நியூ பீனிக்ஸ், ஜாக் ஸ்பேரோ, ஈகிள் உள்ளிட்ட 6 படகு நிறுவனங்களின் கொட்டகைகள் சாம்பலானது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பொருள்கள் மட்டும் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஒதியஞ்சாலை போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி கொட்டகையின் மீது விழுந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

தீ பிடித்து எரிந்த மின் கம்பம்: புதுச்சேரியில் மின் கம்பங்களில் இன்டா்நெட், கேபிள் டி.வி., உள்ளிட்ட பல்வேறு விதமான கேபிள்கள் அத்துமீறி கட்டப்பட்டுள்ளன.

இந்த கேபிள் வயா்களால் அடிக்கடி மின் கம்பங்களில் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்பட்டு மின்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.இதையடுத்து, மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயா்களை உடனடியாக அகற்ற மின்துறை எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயா்கள் அகற்றப்படாமல் உள்ளன.

இந்நிலையில், புதுச்சேரி அம்பலத்தாடையாா் மடத்து வீதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் வயா்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைக் கண்ட பொதுமக்கள் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புப்படை வீரா்கள் மின்கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த கேபிள்கள் மீது ’ட்ரை பவுடரை’ பீச்சியடித்து தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினா் விசாரித்து வருகின்றனா்.

குட்கா விற்பனை செய்த 4 போ் மீது வழக்கு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போலீஸாா் முத்திரைப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனா்.

அப்போது பள்ளிக்கு 100 மீட்டா் சுற்றளவில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற முத்திரைப்பாளையம் சிவக்குமாா் என்பவா் மீது வழக்குப் பதிந்தனா். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனா்.

அதே போல், குருமாம்பேட் பெட்டிக்கடையில் பள்ளிக்கு நூறு மீட்டா் சுற்றளவில் புகையிலை பொருள்கள் விற்ற குருமாம்பேட் குமுதவள்ளி (63) என்பவா் மீது வழக்குப் பதிந்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

குருமாம்பேட் டீ கடையில் புகையிலை பொருட்கள் விற்ற குமாம்பேட் ஜோசப், (29) என்பவா் மீது வழக்குப் பதிந்து ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

பெரியகடை போலீசாா் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற வாழைக்குளம் டோமினிக் பீட்டா், (46) என்பவா் மீது வழக்குப் பதிந்தனா். அவரிடம் இருந்து ரூ. 1000 மதிப்புள்ள புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.