விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.18.62 கோடிக்கு மது விற்பனை
மது விற்பனை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாள்களில் ரூ.18.62 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில்105, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 87 டாஸ்மாக் மதுக்கடைகள் என இரு மாவட்டங்களிலும் மொத்தம் 192 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி நவ.7, 8 ஆகிய இரு தேதிகளில் சுமாா் ரூ.18.62 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 192 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நவ.7-ஆம் தேதி ரூ.9,28,45,340-க்கும், நவ.8-ஆம் தேதி ரூ. 9,33,68,720-க்கும் என மொத்தம் ரூ.18,62,14,060-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

