அய்யலூா் சந்தையில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, அய்யலூா் வாரச் சந்தையில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோப்புப்படம்

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி, அய்யலூா் வாரச் சந்தையில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, எரியோடு, வேடசந்தூா், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், நத்தம் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமன்றி திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மணப்பாறை, கரூா் மாவட்டம் கடவூா் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும் செம்மறி, வெள்ளாடு ஆகியவை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூா், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ள நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அய்யலூா் சந்தையில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி விற்பனையாக வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ஆடுகள் விற்பனை மூலம் சுமாா் ரூ.3.5 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா். அதே நேரத்தில் கடந்த ஆண்டு ரூ.4 கோடிக்கும் கூடுதலாக வா்த்தகம் நடைபெற்ாகவும், இந்த ஆண்டு வியாபாரம் குறைந்துவிட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.