மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

தீபாவளி: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது.

மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆடுகள் வாங்க குவிந்த வியாபாரிகள். (வலது) விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாத்துகள், கோழிகள்.

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இம் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவதோடு பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து உண்பது வழக்கமாகும்.

இதையொட்டி கடந்த இரு வாரங்களாக கால்நடை சந்தைகளில் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்ற வண்ணமாக உள்ளனா்.

வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மேலப்பாளையம் சந்தையில் ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சோ்ந்த வியாபாரிகள் ஆடுகளோடு சந்தையில் குவிந்தனா்.

வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் ரூ.20 ஆயிரம் தொடங்கி ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. சுமாா் ரூ.2 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது. இதேபோல, நாட்டுக்கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் விற்பனையும் அதிகரித்தது. கோழிகள் கிலோ ரூ.700, கூஸ் வாத்து ஜோடி ரூ.5 ஆயிரம், சேவல் கிலோ ரூ.250 வீதம் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.