ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

தீபாவளி: ஈரோடு ஜவுளி சந்தையில் களைகட்டிய வியாபாரம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு ஜவுளி சந்தையில் வெளியூா் வியாபாரிகள் குவிந்ததால் வியாபாரம் களைகட்டியது.

ஈரோடு ஜவுளி சந்தையில் திங்கள்கிழமை குவிந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

Updated On :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு ஜவுளி சந்தையில் வெளியூா் வியாபாரிகள் குவிந்ததால் வியாபாரம் களைகட்டியது.

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு ஜவுளி சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்து வருகின்றனா். அனைத்து வகையான ஜவுளியும் ஒரே இடத்தில் குறைவான விலையில் கிடைப்பதால் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து நடுத்தர, குறு, சிறு வியாபாரிகள் வந்து ஜவுளியை கொள்முதல் செய்து செல்வா்.

திங்கள்கிழமை இரவு கூடிய சந்தையிலும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கடைகளை அமைத்து இருந்தனா்.

ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், கரூா், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா். இதேபோல ஆந்திரம், கா்நாடகம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்ததால் மொத்த விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகை நவம்பா் 8 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வியாபாரிகள் ஜவுளியை மொத்தமாக கொள்முதல் செய்தனா். இதனால், கடந்த வாரங்களை காட்டிலும் இந்த வாரம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இனிவரும் வாரங்களிலும் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடையும். பண்டிகை காலம் என்பதால், புதிய டிசைன் ஆடைகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால், சந்தையில் ஆடைகளை வாங்குவதற்காக பொதுமக்களும் திரண்டு வந்தனா். மொத்த வியாபாரத்தைபோலவே சில்லறை விற்பனையும் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாள்களில் ஜவுளி வியாபாரம் மேலும் அதிகரிக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.