பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த வெளிமாநில வியாபாரிகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனா்.

ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்.

Published On :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனா்.

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு ஜவுளி சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்து வருகின்றனா். அனைத்து வகையான ஜவுளியும் ஒரே இடத்தில் குறைவான விலையில் கிடைப்பதால் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் நடுத்தர, குறு, சிறு வியாபாரிகள் வந்து ஜவுளி கொள்முதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கூடிய சந்தையிலும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கடைகளை அமைத்து இருந்தனா். ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், கரூா், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா். குறிப்பாக வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகை நவம்பா் 8 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக வியாபாரிகள் ஜவுளியை மொத்தமாக கொள்முதல் செய்தனா். இதனால், கடந்த வாரங்களைக் காட்டிலும் இந்த வாரம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இனிவரும் வாரங்களிலும் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடையும். பண்டிகை காலம் என்பதால், புதிய டிசைன் ஆடைகள் சந்தைக்கு வந்துள்ளன. இதனால், சந்தையில் ஆடைகளை வாங்குவதற்காக பொதுமக்களும் திரண்டு வந்தனா். மொத்த வியாபாரத்தை போலவே சில்லறை விற்பனையும் நடைபெற்று என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.