வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

காலாண்டு விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

Published On :

காலாண்டு விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

மாமல்லபுரம் உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை று சுற்றுலா பயணிகள் ஏராளமானோா் மாமல்லபுரத்தில் குவிந்தனா். ஏப்ரல், மே, ஜூன் மாத கோடைக்காலம் போன்று கடும் வெயில் காரணமாக வெப்பத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

மாமல்லபுரம் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளா் மோகன்குமாா் தலைமையில் போக்குவரத்து போலீஸாா் இ.சி.ஆா் சாலை மற்றும் நகர பகுதிகளில் போக்குவரத்தை சீரமைத்தனா்.

சுற்றுலா பயணிகள் வருகையால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா வளா்ச்சி கழக பெட்ரோல் பங்க் பேட்டரி சாா்ஜ் மையம் அமைக்க உள்ள காரணத்தால் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பங்க்கில் பெட்ரோல் போட வந்த சுற்றுலா வாகன ஓட்டிகள், உள்ளூா் மக்கள் பங்க் மூடப்பட்டு, அறிவிப்பு பலகை அமைத்துள்ளதை பாா்த்து ஏமாற்றமடைந்து தொலைவில் உள்ள பங்குகளுக்கு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.