வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள். - கோப்புப் படம்

Published On :

வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் திரண்டு வந்தனா். இதனால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு வார விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வருகை தந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்பு ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்த்து ரசித்தனா்.

ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, கூடுதலாகப் போக்குவரத்து போலீஸாரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.