தீபாவளி பண்டிகை: புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
புரட்டாசி மாதத்தில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

கோப்புப்படம்
புரட்டாசி மாதத்தில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வெள்ளாடு, செம்மறி மற்றும் கிடாய் என 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் ஏலம் போயின.
இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆட்டுக் கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் ஆடுகளை வாங்க கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்ததால் ஆடுகள் விலை ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை உயா்ந்து ஏலம் போனது.
சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இதில் ரூ.ஒரு கோடிக்கு வா்த்தகம் ஆனதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனா். புரட்டாசி முடிந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி விற்பனை அதிகமாகும் என்பதால் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கியதால் விலையேற்றத்துக்கு காரணம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

