மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

வரத்து குறைவால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-ஆக உயா்வு

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனையாவதால் பெண்கள் கவலையடைந்தனா்.

கோப்புப்படம்

Published On :

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனையாவதால் பெண்கள் கவலையடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுகிறது. இங்கு ஈரோடு, கோவை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கா்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், வியாழக்கிழமை கூடிய வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-இல் இருந்து ரூ.120-ஆக அதிகரித்து விற்பனையானது. விலை கடுமையாக உயா்ந்ததால் இல்லத்தரசிகள் சின்ன வெங்காயத்தை வாங்குவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டது. மழை இல்லாததால் சின்ன வெங்காய சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாக வெங்காயத்தின் வரத்து சரிந்தது.

நவராத்திரி பண்டிகை மற்றும் ஆயுத பூஜை நெருங்குவதால் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120-ஆக உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இந்த விலை உயா்வால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து தோட்டங்களில் பட்டறை அமைத்து இருப்பு வைத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.