
மேற்கு வங்கத்தில் கிலோ ரூ. 35-க்கு 1,400 டன் வெங்காயம் விற்பனை!
நாட்டில் வெங்காயத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, அதன் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வெங்காயம்
புதுதில்லி: நாட்டில் வெங்காயத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, அதன் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் கிலோ ரூ. 35 என்ற சலுகை விலையில் 1,400 டன் வெங்காயத்தை மத்திய அரசு விநியோகித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வெங்காயம் விநியோகிக்கப்பட்டது. வெங்காயத்தை ஏற்றி வரும் 'கந்தா எக்ஸ்பிரஸ் ரயில்' 2026 செப்டம்பர் 24 தேதியன்று கொல்கத்தாவை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய இருப்பானது கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், குறிப்பாக பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக விநியோகிக்கப்படும்.
சந்தையில் வெங்காயத்தின் இருப்பு மற்றும் விலைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து என இரு வழிகளிலும் வெங்காயத்தை முக்கிய நகரங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது. ரயில் மட்டுமன்றி, சாலை மார்க்கமாக நாட்டின் பல்வேறு பகுதி நுகர்வோர் மையங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதே வேளையில், பல்வேறு நகரங்களில் வாகனங்கள் மற்றும் அங்காடி மையங்கள் மூலம் கிலோ ரூ. 35 என்ற மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. என்.சி.சி.எஃப், என்.ஏ.எஃப்.இ.டி (NCCF/NAFED) ஆகிய அமைப்புகள் மூலமாக இந்த மலிவு விலை விற்பனை முன்னெடுக்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசு வெங்காய விலையை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், தேவைக்கேற்ப வெங்காயத்தை விடுவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
Summary
The Centre has distributed 1,400 tonnes of onions in West Bengal at a discounted rate of Rs 35 per kg.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






