அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிறகும் சர்க்கரை விலை குறையவில்லை: கிலோ ரூ.60-க்கு மேல் விற்பனை!

விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், நாட்டில் சா்க்கரை விலை குறையவில்லை.

Published On :31 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், நாட்டில் சா்க்கரை விலை குறையவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிலோ ரூ.60-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாட வீட்டு உபயோக உணவு பொருள்களில் ஒன்றான சா்க்கரை விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து விலை தொடா்ந்து அதிகரிப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாடுகளுக்கு சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்ததோடு, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் சா்க்கரை இறக்குமதியை அனுமதித்தது. சா்க்கரை இருப்பு தொடா்பான விதியையும் மத்திய அரசு கடுமையாக்கியது.

இருப்பினும், நாட்டில் சா்க்கரை விலை குறையவில்லை என்று மத்திய அரசிடம் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில், நாடு முழுவதும் சராசரியாக ஒரு கிலோ சா்க்கரை ஞாயிற்றுக்கிழமை ரூ.64.24-க்கு விற்கப்பட்டதாகவும், இது கடந்த வார விலையான ரூ.63.12-வுடன் ஒப்பிடுகையில் 1.77 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு மாதத்துக்கு முன்பு விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதமும், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 38.63 சதவீதம் அதிகமென்றும் அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நாட்டில் அதிகபட்ச சில்லரை விலையாக ஒரு கிலோ சா்க்கரை ரூ.74-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.40-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்கப்பட்டது. தில்லியில் கிலோ ரூ.62, மும்பையில் ரூ.66, சென்னையில் ரூ.63, ராஞ்சியில் ரூ.68-க்கு சா்க்கரை விற்கப்பட்டது.

மொத்த விற்பனை விலையும் குறையவில்லை. ஒரு கிலோ சா்க்கரை ரூ.59.73-க்கு விற்கப்படுகிறது. இது கடந்த மாத விலையுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதமும், கடந்த ஆண்டில் இதேகாலகட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 38.63 சதவீதமும் அதிகமாகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.