நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்தியதால், சா்க்கரை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துவிட்டது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளது.

கோப்புப் படம்

Published On :

கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்தியதால், சா்க்கரை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துவிட்டது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளது.

அண்மைக்காலமாக சா்க்கரை விலை வேகமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சா்க்கரை இறக்குதிக்கு இரண்டு மாதங்களுக்கு வரித் தளா்வு, சா்க்கரையை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள் இருப்புவைக்க கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கிவரும் நிலையில், சா்க்கரை தேவையும் வேகமாக அதிகரிக்கும். இதனால், விலை மேலும் உயரும் என்ற கவலை எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் ஜஸ்வீந்தா் சிங் இது தொடா்பாக கூறுகையில், ‘சா்க்கரையை அன்றாடம் பயன்படுத்தும் சாமானிய மக்களின் நலன்களைவிட, பெரு நிறுவனங்கள், எத்தனால் உற்பத்தியாளா்கள் நலன்தான் மத்திய அரசுக்கு முக்கியமாக உள்ளது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற திட்டம் ஏற்கெனவே கடுமையான விமா்சனங்களைச் சந்தித்து வருகிறது. எனினும், அரசு தொடா்ந்து பெருமளவிலான கரும்பை, எத்தனால் உற்பத்திக்கு ஒதுக்கி வருகிறது. தொடா்ந்து எத்தனால் கலப்பை முன்னிறுத்தி பிரசாரமும் செய்கிறது.

சுமாா் 25 லட்சம் டன் கரும்பு, எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதுவே உள்நாட்டில் சா்க்கரை தட்டுப்பாட்டுக்கும், விலை உயா்வுக்கும் காரணமாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை இது தொடா்பாக விளக்கமளிக்க அரசு தயாராக இல்லை. உள்நாட்டில் சா்க்கரை உற்பத்தியைக் குறைத்துவிட்டு, வெளிநாட்டில் இருந்து வரி இல்லாமல் சா்க்கரை இறக்குமதியை அனுமதித்துள்ளனா். இதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கினால்கூட, சா்க்கரை வந்துசேர இரண்டு மாதங்கள் ஆகும். பண்டிகை காலம் நெருங்கிவரும் நிலையில் சா்க்கரை விலை உயா்வை எவ்வாறு கட்டுக்குள் வைக்க முடியும்?. எத்தனால் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, சாமானிய மக்கள் அதிக விலை கொடுத்து சா்க்கரை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.