மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு கொடுத்திருக்கும் விளக்கம் பற்றி..

சர்க்கரை

சர்க்கரை

Published On :

அண்மைக் காலமாக சர்க்கரை விலை உயர்ந்து வருவதை மத்திய அரசு கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் ஆனால், எத்தனால் உற்பத்திக்கு கரும்புகளை பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதில் உண்மையில்லை எனவும் மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சர்க்கரை உற்பத்தி தரம் கொண்ட 25 லட்சம் டன் கரும்புகள், எத்தனால் தயாரிப்புக்காக மடைமாற்றப்பட்டுள்ளத. இதன் விளைவாக, கடந்த மூன்று மாதங்களில் சா்க்கரை விலை ஒரு கிலோ ரூ.48-இல் இருந்து ரூ.67-ஆகவும், வெல்லம் ஒரு கிலோ ரூ.50-இல் இருந்து ரூ.65-ஆகவும் உயா்ந்துள்ளது. அரிசி, சோள மாவு விலையும் முறையே 16 சதவீதம், 11 சதவீதம் உயா்ந்துள்ளன. கால்நடை தீவனங்களின் விலை 10.34 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனது கூட்டாளிகளுக்கு லாபத்தை அதிகரிப்பதற்காக மத்திய அரசு அவசரகதியில் மேற்கொண்ட நடவடிக்கையால் ஒருபக்கம் வாகன ஓட்டிகள் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ள போதிலும், 20 சதவீத எத்தனால் கலப்பால் செலவு மிச்சமான போதிலும், பெட்ரோல் விலையில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

மறுபக்கம், சர்க்கரை உள்ளிட்டப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம், எத்தனால் உற்பத்திக்காக, கரும்பு பயன்படுத்தப்படுவதாக வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நாட்டில் நான்கில் மூன்று பங்கு எத்தனால் சோளத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

அண்மை வாரங்களில் சர்க்கரை விலை சற்று அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையை மத்திய அரசு கவனத்துடன் கண்காணித்து வருகிறது. தேவையான சர்க்கரை கையிருப்பில் இருப்பதையும், விலையைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், எத்தனால் தயாரிப்புக்கு அதிகப்படியான கரும்பு பயன்படுத்தப்படுவதே காரணம் என்று சொல்வதில் நியாயமில்லை. உண்மை என்னவென்றால், கடந்த 2022-2023ஆம் ஆண்டுகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த கரும்பின் அளவு 12 சதவிகிதம். ஆனால், இது தற்போது 9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தானியங்கள் குறிப்பாக சோளத்திலிருந்துதான் அதிக எத்தனால் தயாரிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் சர்க்கரை உற்பத்திக் குறைந்தது, அதிகத் தேவை, கையிருப்பில் பதுக்கி வைப்பது, உலகளவில் சர்க்கரை விநியோகம் பாதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் ஒருங்கிணைந்த காரணங்களே, சர்க்கரை விலை உயர்வுக்குக் காரணம் என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.