சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

'நாட்டில் சர்க்கரை பற்றாக்குறை இல்லை'

நாட்டில் சர்க்கரைக்கு சிறிதளவும் பற்றாக்குறை இல்லை என தீபக் பலானி தெரிவித்தது பற்றி...

சர்க்கரை

சர்க்கரை - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 6:21 pm IST

நாட்டில் சர்க்கரை பற்றாக்குறை சிறிதளவும் இல்லை என இந்திய சர்க்கரை மற்றும் உயிர் எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ISMA) இயக்குநர் தீபக் பலானி திங்கள்கிழமை (ஆக. 24) தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களில் சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.48-இல் இருந்து ரூ.67-ஆகவும், வெல்லம் ஒரு கிலோ ரூ.50-இல் இருந்து ரூ.65-ஆகவும் உயா்ந்துள்ளது. ஆகையால், இனிப்புப் பொருள்களின் விலைகளும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்க்கரையின் இந்த விலை உயர்வுக்குக் காரணம், பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கைதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து தீபக் பல்லானி பேசியதாவது:

சர்க்கரையின் இந்த சமீபத்திய விலை உயர்வுக்கு எத்தனாலைக் காரணம் காட்டக் கூடாது. அரசின் முதல் முன்னுரிமை உள்நாட்டு நுகர்வுதான். நாட்டின் உள்நாட்டு நுகர்வுக்குப் போதுமான அளவு சர்க்கரை உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை அளிக்கப்படுகிறது.

நான் ஏற்கெனவே கூறியதுதான். நாட்டில் சிறிதளவும் சர்க்கரைக்கு பற்றாக்குறை இல்லை. எங்களிடம் போதுமான சர்க்கரை இருப்பு உள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் அத்ற்குப் பிறகும் நம்மிடம் தேவையான சர்க்கரை இருப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆகவே, நாட்டில் சர்க்கரைக்கு சிறிதளவும் பற்றாக்குறை இல்லை.

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குவதற்கும் போதுமான சர்க்கரை இருப்பை உறுதி செய்வதற்கும் எத்தனால் உதவுகிறது. எனவே, சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணம் என்று நான் குறை கூற மாட்டேன் என்று தீபக் பலானி தெரிவித்தார்.

Summary

Deepak Ballani, Director of the Indian Sugar & Bio-energy Manufacturers Association (ISMA), stated on Monday (Aug. 24) that there is absolutely no shortage of sugar in the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.