பூவரசன்குப்பம் அருகே முதுமக்கள் தாழி, மண்பாண்டம் கண்டெடுப்பு
பூவரசன்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றிலிருந்து கருப்பு-சிவப்பு மண்பாண்டம் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், எஸ்.மேட்டுப்பாளையத்தில் தென்பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி.
விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றிலிருந்து கருப்பு-சிவப்பு மண்பாண்டம் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பூவரசன்குப்பம் அருகிலுள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த க.பிரகாஷ் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் இப்பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளிக்கிழமை கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது முதுமக்கள் தாழிகள் மற்றும் கருப்பு சிவப்பு மண்பாண்டம் கண்டெடுக்கப்பட்டன. இவை 2,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும்.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியது: எஸ்.மேட்டுப்பாளையம் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டபோது, முதுமக்கள் தாழிகள் இருப்பது கண்டறியப்பட்டன. தொடா்ந்து மேற்பரப்பு ஆய்வு செய்ததில் கருப்பு சிவப்பு மண்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய அளவிலான மண்பாண்டம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்புறம் கருப்பு நிறத்திலும், வெளிப்பகுதி கருப்பு சிவப்பு நிறங்களிலும் காணப்படுகிறது. மண்பாண்டத்தின் விளிம்பு மிகவும் மெல்லியதாகவும், கலைநயத்துடனும் அமைந்துள்ளது. மூடியுடன் கூடியதாகவும் இருக்கிறது. ஈமச்சடங்கின் போது இறந்தவருடன் இத்தகைய பொருள்களும் வைத்துப் புதைக்கப்பட்டன. இதற்கு சான்றாக தாழிகளில் எலும்புகளும் காணப்படுகின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டில் இதே பகுதியில் கள ஆய்வு நடத்தினோம். அப்போது குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இப்பகுதியில் அகழாய்வு மற்றும் மேற்பரப்பாய்வு செய்ய வேண்டும். இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்குக் கோரிக்கை வைத்தோம்.
2020, ஜூலையில் தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க, விழுப்புரம் தொல்லியல் அலுவலா் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தது. ஆனால் 6 ஆண்டுகளைக் கடந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மண்பாண்டங்கள்.
தென்பெண்ணையாற்றில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள தொல்லியல் தடயங்கள் அழிவின் விளிம்பில் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க மாவட்ட நிா்வாகமும், தொல்லியல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின்போது பிடாகம் குச்சிப்பாளையம் ப.தமிழழகன் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

