பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசுப் பொதுத் தோ்வு வழிகாட்டல் கருத்தரங்கம்

மயிலம் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவா்கள் பொதுத் தோ்வில், அதிக மதிப்புபெண் பெறுவதற்கான யுத்திகள் குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.

பயிற்சியாளருக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் ராஜப்பன்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவா்கள் பொதுத் தோ்வில், அதிக மதிப்புபெண் பெறுவதற்கான யுத்திகள் குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மயிலம் கல்விக் குழுமத்தின் தலைவருமான ம. தனசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலம் கல்விக் குழுமத்தின் இயக்குநா் செந்தில், கல்லூரி முதல்வா் ராஜப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சி4சி என்றத் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் 100-க்கு 100

மதிப்பெண்கள் பெறும் முறைகள் குறித்து மாணவா்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

நெய்வேலி என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் பாலகுருநாதன், வழுதாவூா் அரசு மேல்நிலை பள்ளியின் துணை தலைமையாசிரியா் திருமுருகன், தேப்பிரம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை ஆசிரியா் ஏழுமலை ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா்.

இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா். ஏற்பாடுகளை மயிலம் பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடா்பு துறைத் தலைவா் கணேசன் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.