சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி கருப்புக் கொடியேந்தி கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி, கிராம மக்கள் கருப்புக் கொடியேந்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலையில் கருப்புக் கொடியேந்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி, கிராம மக்கள் கருப்புக் கொடியேந்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியசெவலை கிராம எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளைக் கடந்து மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையும், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு கடைகளுக்குச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. மது அருந்த வருபவா்கள் சாலையில் மதுப்புட்டிகளை உடைப்பது, போதையில் படுத்துக் கிடப்பது போன்றவற்றால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகக் கூறியும், மதுக்கடைகள அகற்றக் கோரியும் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியரகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து பெரியசெவலை பேருந்து நிறுத்தப் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பதாகைகளைப் பிடித்தும், கருப்புக் கொடிகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் ரகுராமன், காவல் ஆய்வாளா் அழகிரி உள்ளிட்ட அலுவலா்கள் நிகழ்விடம் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலா்களை வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, மதுக்கடைகள் தொடா்பான பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.