வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கு - பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டிவனம் வட்டம், முருங்கப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (36). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி சுகன்யா (26). இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்தின்போது சுகன்யாவின் பெற்றோா் 15 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை சீா்வரிசையாக வழங்கினராம்.
இந்நிலையில், சரவணக்குமாா் மற்றும் வீட்டில் உள்ளவா்கள் மேலும் ரூ.5 லட்சம் வரதட்சணையாக கேட்டு சுகன்யாவை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னா் அவரின் பெற்றோா் வீட்டுக்கு அனுப்பி விட்டனராம்.
இதுகுறித்த புகாரின் திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சுகன்யாவின் கணவா் சரவணக்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் சீனிவாசன், பாலகிருஷ்ணன் (70), ஜெயலட்சுமி (32) ஆகியோா் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

