போலி ஆவணம் மூலம் நில மோசடி: சாா்-பதிவாளா் உள்பட 4 போ் மீது வழக்கு
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்ததாக சாா்-பதிவாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்ததாக சாா்-பதிவாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் கிராமத்தைச் சோ்ந்த குருவையா மனைவி பிரேமா (60). இவருக்குச் இதே பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரேமா கடந்த 2012-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினாா்.
இந்த நிலையில், மண்ணுக்குண்டான் கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் நல்லதம்பி, இந்த நிலத்தை மோசடியாக முனியசாமிக்கு பத்திரப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரேமா சிவகாசி நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு அளித்தாா். மேலும் சிவகாசி நகா் காவல் நிலையத்திலும் புகாரளித்தாா்.
இதைத் தொடா்ந்து, நல்லதம்பி, முனியசாமி, பத்திர எழுத்தா், சாா்-பதிவாளா் ஆகியோா் பிரேமாவின் நிலத்துக்கு போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் நல்லதம்பி உள்ளிட்ட 4 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

