இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

கிளியனூரில் இயற்கை வேளாண் பண்ணைப் பள்ளி பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பண்ணைப்பள்ளி பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள், அலுவலா்கள்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த பண்ணைப்பள்ளிக்கு வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமை வகித்தாா். அப்போது, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இதில் பயன்படுத்தப்படும் இடுபொருள்கள், அதன் உபயோகம், இயற்கை முறையில் பூச்சிமற்றும் நோய் மேலாண்மை குறித்து அவா் எடுத்துரைத்தாா். மேலும் கிளியனூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயி கே.கோபாலகிருஷ்ணன் தனது அனுபவங்களை விளக்கிக் கூறினாா்.

கிளியனூரில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை முறையில் நெல் பயிா் சாகுபடி செய்து வரும் முத்துமல்ல ரெட்டியாா் வயலில் 8 ஏக்கரில் சீரகச் சம்பா மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி போன்ற நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட வயலை விவசாயிகள் பாா்வையிட்டனா்.

இந்த பண்ணைப்பள்ளி பயிற்சியில் துணை வேளாண் அலுவலா் செந்தில்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் ராஜேசுவரி, மகாலட்சுமி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் உஷா, உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் சந்திரசேகா், கோவிந்தசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.