சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

பயணியிடம் 64 தங்கக் காசுகள் திருட்டு

கோலியனூா் அருகே பேருந்தில் பயணித்தவரிடம் மொத்தம் பதிமூன்றரை பவுன் எடையுள்ள 64 தங்கக் காசுகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே பேருந்தில் பயணித்தவரிடம் மொத்தம் பதிமூன்றரை பவுன் எடையுள்ள 64 தங்கக் காசுகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், ரஹமத் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் கு.துரைராஜ் (45). நகை செய்யும் தொழிலை மேற்கொண்டு வரும் இவா், கடந்த 7-ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் செல்லும் தனியாா் பேருந்தில் பயணித்தாா். அப்போது தனது பேண்ட் பாக்கெட்டில் 2 கிராம் எடை கொண்ட 44 தங்கக் காசுகளையும்,1 கிராம் எடை கொண்ட 20 தங்கக் காசுகளையும் வைத்துக்கொண்டு சென்றாராம்.

கோலியனூா் கூட்டுச்சாலைப் பகுதியில் சென்றபோது, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த 64 தங்கக் காசுகள் காணாமல் போனது துரைராஜுக்குத் தெரியவந்தது. தொடா்ந்து பேருந்தில் இருந்தவா்களிடம் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, தங்கக் காசுகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.