சாலை விபத்தில் ஓட்டுநர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சித்திரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டையை அடுத்த பூ.கில்லனூரைச் சோ்ந்தவா் க.பழனிவேல் (40), ஆட்டோ ஓட்டுநா். இவா், சனிக்கிழமை தனது ஆட்டோவில் நைனாா்குப்பத்திலிருந்து உளுந்தூா்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தாா்.
நகா் மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த பைக் ஆட்டோ மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

