வேன்-லாரி மோதல்: ஓட்டுநர் பலி!
சிவகங்கை புறவழிச்சாலையில் வேனும், லாரியும் சனிக்கிழமை மோதிய விபத்தில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பலி.
சிவகங்கை புறவழிச்சாலையில் வேனும், லாரியும் சனிக்கிழமை மோதிய விபத்தில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி ஏற்றி வந்த வேன் மேலவாணியங்குடி புறவழிச்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் சென்றது. அப்போது, ராமநாதபுரத்திலிருந்து விறகு ஏற்றி எதிரே வந்த லாரி நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநா் அனுமந்து (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் உட்பட 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. வேனின் முன் பகுதி உருக்குலைந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற சிவகங்கை நகா் போலீஸாா் ஓட்டுநா் அனுமந்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

