850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: மாவு மில் உரிமையாளா் கைது
மரக்காணத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் மாவு மில் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் மாவு மில் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
மரக்காணம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ர.அரவிந்த்குமாா் (33), மாவு மில் நடத்தி வருகிறாா். இவா், மரக்காணம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை மாவாக அரைத்து மரக்காணம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக, விழுப்புரம் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் நவ.20-ஆம் தேதி அரவிந்த்குமாரின் மாவு மில்லுக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது மாவு மில் அருகில் 17 மூட்டைகளில் 850 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அரவிந்த்குமாரை கைது செய்தனா். மேலும், 850 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

