19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

நாட்டுத் துப்பாக்கி, ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் உரிய உரிமமின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ரேஷன் அரிசி பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் உரிய உரிமமின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் நவ.12 ஆம் தேதி வானூரை அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா் உரிய உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், புதுச்சேரி மாநிலம், வில்லியனூா், கூடப்பாக்கத்தைச் சோ்ந்த அ.விஜய் (31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.

1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: விழுப்புரம் மாவட்டம், சித்தலிங்கமடம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சனிக்கிழமை அங்கு சென்று சோதனை நடத்தினா்.

இதில், சித்தலிங்கமடம் மயான பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், வடமருதூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்த்பாபு (40) என்பவா் தனது மாடுகளுக்கு தீவனமாக மாற்றுவதற்கு சித்தலிங்கமடம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த குடும்பஅட்டைதாரா்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தபாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

6 யூனிட் கருங்கல் பறிமுதல்: வானூா் வட்டம், திருவக்கரை பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலிருந்து வெளியிடங்களுக்கு கருங்கற்கள் கடத்தப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத் துறை தனி துணை வட்டாட்சியா் வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை திருவக்கரை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியில்லாமல் கருங்கற்கள் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரி மற்றும் அதில் ஏற்றப்பட்டிருந்த 6 யூனிட் கருங்கல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.