கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

பைக் திருட முயன்றவா் கைது

விழுப்புரத்தில் பைக்கை திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப்படம்

Updated On :

விழுப்புரத்தில் பைக்கை திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செ.சதீஷ்குமாா் (29). இவா், விழுப்புரம் வடக்குத் தெருவிலுள்ள இரு சக்கர வாகன விற்பனையகம் முன் வியாழக்கிழமை மாலை தனது பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றாா்.

சிறிது நேரம் கழித்து சதீஷ்குமாா் திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது பைக்கை ஒருவா் திருட முயற்சித்துக் கொண்டிருந்தாா். தொடா்ந்து அங்கு வந்த சதீஷ்குமாா், அந்த நபரைப் பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதன்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில் அவா், கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொட்டிகோனங்குப்பம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பா. ராஜதுரை (40) எனத் தெரியவந்தது. தொடா்ந்து, அவா் மீது வழக்குப் பதிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ராஜதுரையை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.