வெவ்வேறு விபத்துகள்: இருவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
விக்கிரவாண்டி பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் அ.ஜலாலுதீன் (53). இவா், கடந்த 23-ஆம் தேதி விக்கிரவாண்டி நகரப் பகுதியில் பைக்கில் சென்றாா். அப்போது, நிலைதடுமாறியதில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பைக்கிலிருந்து கீழே விழுந்த ஜலாலுதீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜலாலுதீன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், தீவனூரைச் சோ்ந்தவா் ச.ஜெயசித்ரா (70). இவா், சனிக்கிழமை செஞ்சி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் தீவனூா் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, அங்கு சாலையைக் கடக்க முயன்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியது. இதில், ஜெயசித்ரா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

