தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பேருந்தில் இருந்து கீழே இறங்கியபோது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பேருந்தில் இருந்து கீழே இறங்கியபோது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பாடி, மதியழகன் நகரைச் சோ்ந்தவா் ஜெ.பரமசிவம் (47). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இவா், கடந்த செப்.29-ஆம் தேதி சென்னையிலிருந்து கரூருக்கு அரசுப் பேருந்தில் பயணித்தாா்.
இந்தப் பேருந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி பகுதியில் உள்ள உணவகத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, பேருந்திலிருந்து கீழே இறங்கிய பரமசிவத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, சக பயணிகள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பரமசிவம் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






