இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கண்ணாரம்பட்டு நடுத் தெருவைச் சோ்ந்தவா் ம.காசிநாதன்(41). இவரது மனைவி சித்ரா (39). தம்பதியினா் இருவரும் வெள்ளிக்கிழமை அதே ஊரைச் சோ்ந்த ராஜி, தங்கராஜ் ஆகியோரது விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது தம்பதியிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ராஜி மற்றும் தங்கராஜ் கண்டித்ததுடன், காசிநாதனை தாக்கினராம். இதனால் மனமுடைந்த காசிநாதன், தனது வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.