பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கல்

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழுப்பரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்று பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றவா்களுடன் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறை வீரா்கள், வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்தவும், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விளையாட்டுத் திறன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப்.9-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என போட்டிகள் தனித்தனிப் பிரிவுகளில் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு விழுப்புரம் மாவட்டஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டில் பங்கேற்கும் வீரா்கள், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டிகளில் வென்று மாவட்டத்துக்கு பெருமையைச் சோ்க்க வேண்டும் என்று வீரா்களை ஆட்சியா் வாழ்த்தினாா்.

நிகழ்வில் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன், துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரீஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.