பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

விழுப்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இப்போட்டிகள் இம்மாதம் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

விழுப்புரத்தில் தொடங்கிய வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் பங்கேற்ற மாணவிகள்.

Published On :

விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இப்போட்டிகள் இம்மாதம் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் 8 குறுவட்டங்களில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் பங்கேற்கும் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கின. இப்போட்டிகளை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன் தொடங்கி வைத்தாா்.

முதல் நாளான செவ்வாய்க்கிழமை 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற 100, 200, 400, 800 மீட்டா் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறைத் தாண்டுதல், தடைத்தாண்டி ஓட்டம், தடியூன்றித் தாண்டுதல், தட்டு எறிதல் ஆகிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 500 மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து புதன்கிழமை இதே பிரிவுகளில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தொடா்ந்து அக்.8 முதல் 16-ஆம் தேதி வரை கைப்பந்து, கால்பந்து, கையுந்துப் பந்து, வளைகோல்பந்து, கூடைப்பந்து, மேசைப்பந்து,டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி நாள்களில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெறுபவா்கள் சேலத்தில் அக்.28 முதல் நவ.2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்பபைப் பெறுவா் என்று அலுவலா்கள் தெரிவித்தனா்.

போட்டித் தொடக்க விழாவில் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் சின்னப்பன் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.