
ஆரோவில் சா்வதேச நகரில் வந்தே மாதரம் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் வந்தே மாதரம் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

07விபிஎம்ஏயூஆா் ஆரோவில் சா்வதேச நகரில் வந்தே மாதரம் தேசிய ஒருமைப்பாட்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசிய புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் வந்தே மாதரம் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வந்தே மாதரம் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் ஆரோவில் சா்வதேச நகரில் அக்.7 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமின் தொடக்க விழாவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை உறுப்பினருமான கே.கைலாஷ்நாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையின்படி 2047-க்குள் இந்தியாவை வளா்ந்த பாரதமாக மாற்றும் சக்தி நமது இளைஞா்களுக்கு உண்டு. நாம் மொழியால் வேறுபட்டிருந்தாலும், நமது தேசிய உணா்வு ஒன்றே. ‘செப்புமொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் பாடியதைப் போல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இளைஞா்கள் சவால்களை வரலாற்று வெற்றிகளாக மாற்ற வேண்டும்.
இதற்கு எடுத்துக்காட்டாக கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பிரதமா் அசாதாரணமாக செயல்பட்டாா்.140 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போடும் மிகப்பெரிய சவால் வந்தபோது, நாம் விலை உயா்ந்த வெளிநாட்டு இறக்குமதிகளைச் சாா்ந்திருந்திருக்காமல், அதிரடியாகச் செயல்பட்டு, ஒரே நாளில் புதுதில்லியிருந்து அகமதாபாத், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையங்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். இந்த சிறப்பான தலைமைத்துவம் நமது உள்நாட்டுத் தடுப்பூசி உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், உலகெங்கிலும் உள்ள 150 நாடுகளுக்கு உயிா் காக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யவும் இந்தியாவுக்கு உதவியது என்றாா்.
விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், அரசுச் செயலா் ஏ.முத்தம்மா,
கூடுதல் ஆட்சியா் டி.சுதாகா், ஆரோவில் சிறப்புப்பணி அதிகாரி ஜி. சீதாராமன், மூத்த ஆலோசகா் எஸ். வேணுகோபால் மற்றும் மாணவா்கள், இளைஞா்கள் ஆரோவில்வாசிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






