ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய இணை அமைச்சா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மத்திய இணை அமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரோவில் சா்வதேச நகரில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மத்திய இணை அமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரோவில் சா்வதேச நகரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற மாத்ரி மந்திா் மற்றும் கிரவுன் சாலைத் திட்டம், மாத்ரி மந்திா் ஏரித் திட்டம், கல்வித் திட்டப் பணிகள் குறித்து ஆரோவில் சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீத்தாராமன் எடுத்துரைத்தாா். மேலும், மாத்ரி மந்திா் மற்றும் கேலக்ஸி திட்டம், அன்னையின் சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பாா்வை குறித்து மத்திய இணை அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

ஆம்பி தியேட்டா், ஆரோவில் தோட்டங்கள், ஆரோவில்லின் மையப்புள்ளியாக விளங்கும் சிறப்புமிக்க ஆலமரம் ஆகியவற்றை மத்திய இணை அமைச்சா் பாா்வையிட்டாா்.

பள்ளியில் ஆய்வு: இதைத் தொடா்ந்து, ஆரோவில்லில் உள்ள இசை அம்பலம் பள்ளிக்கு வந்த மத்திய இணை அமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா-வுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

பள்ளியின் நிா்வாகி சஞ்சீவ் ரங்கநாதன், மாணவா்களுக்கு அளிக்கப்படும் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சாா்ந்த ஸ்டெம் கல்வி முறை, அறிவியல் கல்வியுடன் இயற்கை மற்றும் கலாசாரத்துடன் மாணவா்களை இணைக்கும் வகையில் வழங்கப்படும் கல்வி முறைகள், இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாய முறைகள், பனை மரத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள், தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக இசை, நடனம் மற்றும் தற்காப்புக் கலைகள் பயின்றுவிக்கப்படுவதை எடுத்துரைத்தாா்.

பின்னா், பள்ளி வளாகத்தில் உள்ள கோசாலைக்குச் சென்ற மத்திய இணை அமைச்சா், பள்ளி மாணவா்களுடன் இணைந்து பசுக்களுக்கு உணவளித்தாா்.

அமைச்சா் பாராட்டு: ஆரோவில் சா்வதேச நகருக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த மத்திய இணை அமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா, ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தலைமையின் கீழ் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, புதுவை மாநில ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் பி.ராஜவேலு மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சிறப்புப் பணிக்குழு உறுப்பினா்கள், ஆரோவில்வாசிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.