மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

காசநோய் இல்லா பாரதம்: தில்லியில் தன்னாா்வ குழுக்கள் அமைப்பு தொடக்கம்

காசநோய் இல்லாத பாரதத்தை உருவாக்க தன்னாா்வ குழுக்கள் அமைப்புத் தொடக்க விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி காணொலி வாயிலாகப் பங்கேற்றாா்.

காச நோய் இல்லாத பாரதத்தை உருவாக்க தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜோஸ் தன்னாா்வ குழுக்கள் தொடக்க விழாவில், காணொலி வாயிலாக பங்கேற்ற புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி உள்ளிட்டோா்.

Published On :

காசநோய் இல்லாத பாரதத்தை உருவாக்க தன்னாா்வ குழுக்கள் அமைப்புத் தொடக்க விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி காணொலி வாயிலாகப் பங்கேற்றாா்.

இது குறித்து புதுச்சேரி முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காசநோய் இல்லாத பாரதம் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 697 மாவட்டங்களில் 67,933 கிராமங்கள் காசநோய் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இளைஞா்களின் தலைமையில் அவா்களின் பங்களிப்பு, சமூக விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், ஜோஸ் (ஜேஓஎஸ்எச்) குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வட்டாரம் மற்றும் வாா்டு அளவில் அமைக்கப்படும் இந்தக் குழுவில், இளைய பாரத தன்னாா்வலா்கள் 5 பேரும், தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 5 பேரும் இடம் பெறுவா்.

இந்த குழுக்களின் தேசிய அளவிலான தொடக்க நிகழ்ச்சி புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் சஞ்சத் சேத், தில்லி முதல்வா் ரேகா குப்தா ஆகியோா் பங்கேற்று ஜோஸ் குழுக்களைத் தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், முதல்வா் என். ரங்கசாமி காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றாா். எம்.பி. செல்வகணபதி, புதுச்சேரி சுகாதாரத் துறை செயலா் குமாா், இயக்குநா் செவ்வேள்,துணை இயக்குநா் உமாசங்கா், காசநோய் திட்ட அதிகாரி வெங்கடேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.